72 பணக்கார நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை : சந்திரிக்கா வெளியிட்ட ஆச்சரிய தகவல்
சிறிலங்காவின் அதிபராக தான் பணியாற்றிய காலத்தில், உலகின் 72 பணக்கார நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்திருந்ததாக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது 11 வருட ஆட்சி காலம் இலங்கையின் மிக செழிப்பான காலமாக திகழ்ந்தது என சந்திரிக்கா பண்டாரநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இலங்கையில் தனக்கு முன்னதான ஆட்சி காலத்தில் காணப்பட்ட ஊழல் நடவடிக்கைகளை தான் முற்றாக அழித்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி
அத்துடன் இலங்கையை மேம்படுத்த மற்றும் அபிவிருத்தி செய்ய தேவையான பல நடவடிக்கைகளை தான் முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு நாட்டின் நிலையை மேம்படுத்த இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
மாறாக தற்போதைய ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் இலங்கையின் நிலையை மேலும் மோசமடைய செய்துள்ளதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |