கோட்டாபயவின் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது : சம்பிக்க விளாசல்
தன்னை ஆட்சிக்கட்டிலில் இருந்து சர்வதேச சக்திகள் அகற்றியதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த குற்றச்சாட்டு நகைப்புக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நுகேகொட நாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோட்டாபயவின் முட்டாள்தனமான நிர்வாகத்தால்
கோட்டாபய ராஜபக்சவை அதிபர் பதவியிலிருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை .அவரது முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டன.
பொருளாதார படுகொலையாளி
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பொருளாதார படுகொலையாளி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே கடந்த காலம் பற்றி புத்தகம் எழுதுவது பயனற்றது.
ராஜபக்சர்களின் வியாக்கியானத்தை நாட்டு மக்கள் கவனத்தில்கொள்வதில்லை என்றார்.
தேசிய மற்றும் சர்வதேசத்தின் சதியினால் தான் அதிபர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கோட்டாபய ராஜபக்ச குறிப்பிடுவது நகைப்புக்குரியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |