தனது வாழ்க்கையில் சந்திரிக்கா விட்ட வரலாற்று தவறு!
2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக முன்னிறுத்தியமை தனது வாழ்க்கையில் மேற்கொண்ட வரலாற்றுத் தவறு என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அழிவுக்குக் காரணமானவர்கள் இருவர் என்றும், இருவரும் தன்னை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கியதாகவும், அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உண்மையான சிறிலங்கா சுதந்திரக் கட்சி
எனினும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பதில் தலைவராக உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியே உண்மையான சிறிலங்கா சுதந்திரக் கட்சி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியைப் பாதுகாக்க
தற்போதைய நிலையில் சிறிலங்கா சுதந்திர கட்சியில் பதவிகள் எதனையும் ஏற்காத போதிலும் கட்சியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா பவுண்டேஷனில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே முன்னாள் அதிபர் இதனைத் தெரிவித்தார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |