சில அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்றம்!
ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இரு அமைச்சுக்களின் செயலாளர்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரச தலைவரின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க (Kingsly Rathnayaka ) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன்படி, விவசாய அமைச்சின் செயலாளராக டி.எம்.எல்.டி.பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையிலேயே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
කෘෂිකර්ම අමාත්යාංශයේ ලේකම් ලෙස ඩී.එම්.එල්.ඩී බණ්ඩාරනායක මහතාව ජනපතිතුමා විසින් පත් කරනු ලැබුණා.#lka
2022-01-01 දින සිට ජනමාධ්ය අමාත්යාංශයේ ලේකම් ලෙස අනුෂ පැල්පිට මහතාව ජනපතිතුමා විසින් පත් කරනු ලැබුණා.#lka
