வாகன கடன் வசதிகளில் ஏற்பட்ட மாற்றம்: வெளியான எச்சரிக்கை
இலங்கை மத்திய வங்கி வாகன நிதியளிப்புக்கான கடன் மதிப்பு வீதங்களில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோட்டார் வாகனங்களுக்கு நிதி வசதிகளை வழங்குவதில் பின்பற்ற வேண்டிய முறைகளைப் புதுப்பித்து, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள், மின்சார வாகனங்கள் வாங்குவதை ஓரளவுக்கு ஊக்கப்படுத்தாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகன இறக்குமதி
சில வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன்களின் வீதம் குறைக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதில் ஆர்வம் மாறக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வாகனம் வாங்கும் போது பலர் வங்கி அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து கடன் பெறுகிறார்கள்.
அதன்படி, வாகனத்தின் மதிப்பில் எவ்வளவு தொகையை வங்கிக் கடனாகப் பெறலாம் என்பது தொடர்பில் வழிகாட்டுதல்களை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
