ஜனவரி முதல் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்
பழைய முறைகளை தொடர்வதன் ஊடாக நாட்டிற்கு எதிர்காலம் கிடையாது, கடந்த சில வருடங்களில் ஒரு தேசம் என்ற வகையில் நாம் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை எதிர்கால சந்ததியினர் வரை கொண்டு செல்ல முடியாது என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டையிலுள்ள சோலிஸ் ஹோட்டலில் நேற்று (06) நடைபெற்ற அரச மதிப்பீட்டுத் திணைக்களத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்காவிற்கு நேரடி விமான சேவை ஆரம்பம்:சுற்றுலா பயணிகளுடன் வந்த விமானத்திற்கு வரவேற்பு (படங்கள்)
நாட்டின் பொருளாதாரம்
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் உரையாற்றுகையில்,
“18 மாதங்களில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டுள்ளோம்.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊழியர் சமூகம் மேற்கொண்டுள்ள பணிகள் பாராட்டத்தக்கது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியான முறையில் நிர்வகிக்காவிட்டால் மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும்.” என்றார்.
இந்த நிகழ்வில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, அரசின் பிரதம மதிப்பீட்டாளர் புஷ்பா முத்துகுமாரன, தபால்மா அதிபர் ருவன் சத்குமார மற்றும் அரச மதிப்பீட்டுத் திணைக்கள ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |