இலங்கை மருத்துவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவராக சன்ன ஜயசுமன தெரிவு
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மருத்துவ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவு செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பத்தி (Upul Galappaththi) அவரது பெயரை முன்மொழிந்ததுடன், வைத்தியகலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே (Sudarshani Fernandopulle) அதனை வழிமொழிந்தார்.
ஒன்றியத்துக்கான செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும் முதலாவது கூட்டம் நேற்று (25) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் தெரிவு செய்யப்பட்டார்.
போசகர்கள் தெரிவு
அத்துடன், ஒன்றியத்தின் போஷகர்களாக வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) மற்றும் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இணை உப தலைவர்களாக வைத்தியகலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் வைத்திய கலாநிதி காவிந்த ஜயவர்தன (Kavinda Jayawardena) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும், ஒன்றியத்தின் இணை அமைப்பாளர்களாக வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ச (Thilak Rajapaksha) மற்றும் வைத்திய கலாநிதி உபுல் கலப்பத்தி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |