செங்கடலில் நிலை தடுமாறிய அமெரிக்க போர் விமானங்கள்
அமெரிக்க கடற்படையின் F/A-18F சூப்பர் ஹார்னெட், விமானம் தாங்கிக் கப்பலான USS Harry S. Truman-ல் தரையிறங்கத் தவறியதால் செங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
போர் விமானத்தின் தடுப்பு கம்பிகள் அறுந்தமையால் விமானம் செங்கடலில் வீழ்ந்ததாகவும், இதில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவும் அதே கப்பலில் மற்றொரு விமானம் விபத்துக்குள்ளானதுடன், இது இரண்டாவது போர் விமானமாகும்.
அமெரிக்க பதிலடி
இந்த நிலையில், F-18 போர் விமானத்தின் விபத்து குறித்த நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த விமானம் ஹவுதி அமைப்பினால் தாக்கப்படவில்லை என்பதை தங்களால் உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னியில், செங்கடலில் வணிக கப்பல்கள் மீதான ஹவுதிகளின் தாக்குதல்களுக்கு அமெரிக்க பதிலடி கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
