இஸ்ரேலை கைவிடுமா அமெரிக்கா - ஈரானின் அசுரபலம் திக் திக நிமிடங்கள்!!
உலகில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயம் ஈரானை அமெரிக்கா தாக்குமா..? அந்த தாக்குதலுக்கான பச்சைக்கொடியை ஜனாதிபதி ட்ரம்ப் காட்டுவாரா என்பதுதான்.
ஈரானுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவின் படைபலம் என்பது எண்ணிலடங்காதது. அணுசக்தி கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், மற்றும் ஆயுத, ஆட்பலம் என அதன் இராணுவ வலிமை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இவ்வளவு வலிமையை கொண்ட அமெரிக்காவிற்கு தற்போது ஈரான் ஏன் தலையிடியாக மாறியுள்ளது.
ஈரான் மூலம் அதிகம் பாதிக்கப்படும் நாடு இஸ்ரேல்தான். ஏனெனில் ஈரான் ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற ஆயுத குழுக்களுக்கு உதவி புரிந்து வருவதால் நிம்மதியிழந்து தவிக்கிறது இஸ்ரேல்.
அத்துடன் ஈரான் தற்போது அணுவாயுதத்தை தயாரிக்கும் நிலையில் உள்ள நிலையிலும் அதன் ஏவுகணை தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையிலும் பிராந்தியத்தில் உள்ள தனது இராணுவ தளங்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் அதன் முக்கிய பங்காளியான இஸ்ரேலுக்கு கடும் நெருக்கடி ஆகியவற்றால் பதறிப்போய் உள்ளது அமெரிக்கா.
எனினும் அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தலை பகிரங்கமாக எதிர்கொண்டு நிற்கும் ஈரான், தாக்கினால் தாக்குவோம் பிராந்திய போர் வெடிக்கும் என தானும் அச்சுறுத்தி நிற்கின்றது.
இந்தநிலையில் இந்த மோதல் வெடிக்குமா? அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதனை ஆராய்கிறது ஐபிசி தமிழ் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |