சனல் 4 இன் ஆவணப் பதிவு சர்ச்சை : சர்வதேச விசாரணை கோரும் செல்வம் எம்.பி
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகம் வெளியிட்ட ஆவணம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணையில் நம்பிக்கையில்லை என ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணைகளின் ஊடாக குற்றவாளிகள் காப்பாற்றப்படும் நிலை காணப்படுவதாக கூறிய அவர், சர்வதேச விசாரணையே இதற்கான தீர்வு என மன்னாரில் நேற்று(10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூறினார்.
குழு அமைக்கும் ரணில்
இதேவேளை, பிரித்தானிய ஊடகமான சனல் 4 அண்மையில் வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமிக்கவுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் உண்மையைக் கண்டறியவும் நீதியை நிலைநாட்டும் வகையிலும் அதிபர் இந்தக் குழுவை நியமிக்க உள்ளார்.