சனல் 4 வெளியிட்ட ஆவணம் : கேள்விகளும் சந்தேகங்களும்

Sri Lankan Tamils Sri Lanka Government Of Sri Lanka Easter Attack Sri Lanka Sonnalum Kuttram
By Vanan Sep 07, 2023 12:36 PM GMT
Report
Courtesy: அ. நிக்ஸன்

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான நிரந்த அரசியல் தீர்வு பற்றிய உரையாடல் எல்லாமே தற்போது ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களின் ஜனநாயக உரிமை அல்லது மனித உரிமைப் பாதுகாப்பு விவகாரமாக மாறி வருகிறது.

2015 ஜனவரியில் நல்லாட்சி என்று கூறிக் கொண்டு பதவிக்கு வந்த மைத்திரி – ரணில் அரசாங்கம் இதனைக் கன கச்சிதமாகச் செய்திருக்கிறது.

சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம்

அதற்கேற்ப 2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழி சமைத்துமுள்ளது. இதனையே சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த ஆவணப்படம் சித்தரிக்கிறது.

பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் இரகசிய தகவல்கள்: முன்னாள் சகா ஐபிசிக்கு அதிரடி தகவல்

பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் இரகசிய தகவல்கள்: முன்னாள் சகா ஐபிசிக்கு அதிரடி தகவல்

தேவாலயங்கள், ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 269 பேரின் உறவினர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருதிதில்லை. ஆனால் முப்பது வருட போரிலும் அதற்கு முன்னர் 1958 இல் இருந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொலைகள், வன்முறைகள் பற்றிப் பேசுவதைவிடவும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிக் குரல் கொடுப்போரின் பின்னணி பற்றியே அதிகளவு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சந்தேகங்கள் வருமாறு,

1) உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள இராணுவ உயர் அதிகாரிகள் சிலரினால் கையாளப்பட்ட தமிழ் - முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் 2009 முள்ளிவாய்க்கல் போருக்கே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டனர் என்ற உண்மையை சனல் 4 தொலைக்காட்சி முறைப்படி வெளியிட்டதா?

2) ஜே.ஆர் ஜயவர்த்தனவில் இருந்து ரணில் விக்ரமசிங்க வரையும் தமிழர்களின் போராட்டத்தைப் பயங்கரவாதமாகத் திசை திருப்பி முறியடிக்க, தமிழ் -முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இலங்கை இராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டன. இதற்கு அமெரிக்க - இந்திய அரசுகளும் ஒத்துழைத்த உண்மைகளை சனல் 4 ஆதாரங்களுடன் வெளியிட விரும்பியதா?

3) இலங்கைப் புலனாய்வுத்துறையிடம் தமிழ் - முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் சம்பளத்துக்குப் பணியாற்றினர் என்பது பரகசியம். (Revealing or Publishing Secrets)

4) ஜெனிவா மனித உரிமைச் சபை ஆரம்பமாகவதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் அவ்வப்போது போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட்டு வரும் சனல் 4 தொலைக்காட்சிக்கு, 2009 இற்குப் பின்னரும் ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி இலங்கை இராணுவம் வடக்குக் கிழக்கில் மேற்கொண்டு வரும் அச்சறுத்தல்கள் மற்றும் காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் பற்றி ஏதேனும் விபரங்கள் தெரியாதா?

5) போர்க் குற்றம் பற்றியும் 2019 இல் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்தும் வெளிப்படுத்திய ஆர்வம், 2009 மே மாதத்திற்குப் பின்னரும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் தொடர் அநீதிகள் பற்றி ஏன் இல்லாமல் போனது?

சனல் 4 வெளியிட்ட ஆவணம் : கேள்விகளும் சந்தேகங்களும் | Channel 4 Video On Easter Attacks Questions Doubts

ஈஸ்டர் தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் இவர் தான்..! சனல் - 4 இல் அம்பலமாகப்போகும் அதிர்ச்சி தகவல்கள் (காணொளி)

ஈஸ்டர் தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் இவர் தான்..! சனல் - 4 இல் அம்பலமாகப்போகும் அதிர்ச்சி தகவல்கள் (காணொளி)

ஆகவே மேற்குலக நாடுகளின் தேவைக்கும் புவிசார் அரசியல் - பொருளாதார நோக்கிலும் சனல் 4 தொலைக்காட்சி செயற்படுகிறது என்று கூறலாமா?

ஏனெனில், சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப் படத்தின் பின்னர், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கிறார்.

சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கோரியுள்ளார்.

ஆகவே சிங்கள அரசியல் தலைவர்கள், சிங்கள மதத் தலைவர்கள் எல்லோருமே 2009 போரையும் ஈழத் தமிழர்களின் எண்பது வருட அரசியல் விடுதலைப் போராட்டத்தையும் எப்படிப் பார்க்கின்றனர் என்பது புரிகின்றதல்லவா?

அரசியல் நிகழ்ச்சி நிரல் தானா?

மேற்கு நாடுகளின் தேவையென்ன? இலங்கை சிறிய அரசு. ஊழல் மோசடி அதிகாரத் துஸ்பிரயோகம் நிறைந்த அரசு. அங்கு இன ஒடுக்கல் நடக்கிறது. இவை பற்றியெல்லாம் தெளிவாகத் தெரிந்தாலும், தமது புவிசார் அரசியல் - பொருளாதார நோக்கில் தெரியாதது போன்று இயங்குகின்றன.

சனல் 4 வெளியிட்ட ஆவணம் : கேள்விகளும் சந்தேகங்களும் | Channel 4 Video On Easter Attacks Questions Doubts

சனல் 4 ஆவணத்தால் அதிரும் இலங்கை - கோட்டாபய வெளியிட்ட விசேட அறிக்கை

சனல் 4 ஆவணத்தால் அதிரும் இலங்கை - கோட்டாபய வெளியிட்ட விசேட அறிக்கை

வல்லரசுகளின் இந்த அணுகுமுறைதான் சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த யோகம். ஆனால் வல்லரசுகளின் இந்தப் பிழையான அணுகுமுறைகள் பற்றி சனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்துமா?

ஏனெனில் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்தான் இங்கு பிரதானமாகிறது.

தமிழர்களின் அரசியல் நியாயத்தை முடக்க எண்பது வருடங்களாக வெவ்வேறு வியூகங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளை வெளிப்படுத்தக் கூடிய ”மூலங்கள்” சனல் 4 தொலைக் காட்சிக்குத் தெரியாததல்ல. ஆனால்?

ReeCha
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி