சனல் 4 ஆவணத்தால் அதிரும் இலங்கை - கோட்டாபய வெளியிட்ட விசேட அறிக்கை
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளி தமது பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
நேற்று அதிகாலை வெளிவந்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள இந்தக் காணொளி தொடர்பில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையிலலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொய்யான தகவல்
“ஈஸ்டர் தாக்குதலுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உரிய தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் குறித்த விசாரணைக்கு நானே உத்தரவிட்டேன்.
2005 இலிருந்து ராஜபக்சர்களின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டதே சனல் 4 காணொளி.
ராஜபக்சர்களுக்கு எதிராக குறித்த சனலில் ஒளிபரப்பப்பட்ட முந்தைய படங்களைப் போலவே இவையும் பொய்கள் ஆகும்
என்னை அதிபராக அமர்த்துவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகளின் குழு கொடிய குண்டுவெடிப்புகளை நடத்தியதாக கூறுவது முற்றிலும் அருவருப்பானது.
அரசியல் நிலைப்பாட்டில் இருந்து சிலர் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், நான் பொதுப் பதவியில் இருந்த போதெல்லாம் ரோமன் கத்தோலிக்க சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் அனைத்து சேவைகளையும் செய்துள்ளேன் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் இவர் தான்..! சனல் - 4 இல் அம்பலமாகப்போகும் அதிர்ச்சி தகவல்கள் (காணொளி)




ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 23 மணி நேரம் முன்
