பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

Bandaranaike International Airport India Crime Arrest
By Thulsi Feb 27, 2026 10:52 AM GMT
Report

புதிய இணைப்பு

போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்கவை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர் இன்று (27) பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

கைது செய்யப்பட்ட பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்தியா - மும்பையில் இருந்து இன்று அதிகாலை 5.56 மணிக்கு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி | Podi Lassie Brought To Sri Lanka From India

ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான யுல்.எல் 142 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .

தீவிர போராட்டங்களில் குதிக்கும் தமிழரசுக் கட்சி - சுமந்திரனின் அவசர வேண்டுகோள்

தீவிர போராட்டங்களில் குதிக்கும் தமிழரசுக் கட்சி - சுமந்திரனின் அவசர வேண்டுகோள்

இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்

நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஜனித் மதுசங்க எனப்படும் பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி | Podi Lassie Brought To Sri Lanka From India

பிணை வழங்கப்பட்டதை அடுத்து, அவர் சட்டத்தரணி ஒருவரின் காரிலேயே நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

இதனையடுத்து, அவர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்றுள்ளதுடன், அவர் இன்று அதிகாலை நாட்டுக்குக் அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

கடந்த ஆண்டியில் அயிரக்கணக்கில் பலியான புலம்பெயா் அகதிகள்!

கடந்த ஆண்டியில் அயிரக்கணக்கில் பலியான புலம்பெயா் அகதிகள்!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்த ட்ரம்ப்

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்த ட்ரம்ப்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016