மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்த ட்ரம்ப்

Donald Trump United States of America Iran World
By Shalini Balachandran Feb 26, 2026 10:58 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜெனீவாவில் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிடிகொடுக்காத ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தின.

சுரேஷ் சாலே கைது! பிள்ளையான் கொடுத்த வாக்குமூலத்தால் நாமலுக்கு இறுகும் பிடி

சுரேஷ் சாலே கைது! பிள்ளையான் கொடுத்த வாக்குமூலத்தால் நாமலுக்கு இறுகும் பிடி

இராணுவப் பலம்

இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படைகளைக் குவித்து இராணுவப் பலத்தைக் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, அரபு நாடுகள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஈரானுடன் பேச்சுவார்த்தையை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்த ட்ரம்ப் | Us Iran Nuclear Talks Geneva Trump Deadline

எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கும் என்ற சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “பயங்கரவாதத்தின் முதன்மை ஆதரவாளரான ஈரான் அணு ஆயுதம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

அடுத்த பத்து முதல் 15 நாட்களுக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு!

ரஷ்யா - உக்ரைன் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு!

ஈரானின் பொருளாதாரம்

இந்தநிலையில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இன்று ஜெனீவாவில் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இதில், அமெரிக்கத் தரப்பில் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் மற்றும் அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையிலான குழுவினரும் பங்கேற்கின்றனர்.


ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைதி இந்தப் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைத்துள்ளார்.

ஈரானின் பொருளாதாரம் ஏற்கனவே கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதுடன் உள்நாட்டிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இப்படிப்பட்ட சூழலில், இன்று நடக்கும் பேச்சுவார்த்தையின் முடிவு போரைத் தவிர்க்குமா அல்லது நேரடி மோதலுக்கு வழிவகுக்குமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வழக்கறிஞர் மற்றும் மனைவி படுகொலை : கைதான முன்னாள் கடற்படைவீரரின் அதிர வைக்கும் தகவல்கள்

வழக்கறிஞர் மற்றும் மனைவி படுகொலை : கைதான முன்னாள் கடற்படைவீரரின் அதிர வைக்கும் தகவல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025