இலங்கைக்கு கடத்த முயன்ற உயர்தர முந்திரிப் பருப்பு மூட்டைகள் பறிமுதல்!

Sri Lanka India
By Shalini Balachandran Feb 26, 2026 11:50 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report
Courtesy: Nayan

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் படகில் ஏற்றப்பட்ட உயர்தர முந்திரிப் பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மூட்டைகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்திய மதிப்பில் 15 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 620 கிலோ உயர்தர முந்திரிப் பருப்பு மூட்டைகள் இச்சம்பவத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்த ட்ரம்ப்

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்த ட்ரம்ப்

கிடைத்த தகவல் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம், வேதாளை, மரைக்காயர்பட்டினம், குந்துகால், களிமண்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இலங்கைக்குக் கடல் வழியாக நாட்டுப்படகில் கஞ்சா, பீடி இலை பண்டல்கள், முந்திரிப் பருப்பு, கடல் அட்டை மற்றும் சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு கடத்த முயன்ற உயர்தர முந்திரிப் பருப்பு மூட்டைகள் பறிமுதல்! | High Quality Cashew Nuts Smuggling

இந்தநிலையில் மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குப் பைபர் படகில் பொருட்கள் கடத்த இருப்பதாகக் கியூ பிரிவு ஆய்வாளர் ஜீவமணிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (26-02-2026) அதிகாலை கியூ பிரிவு காவல்துறையினர் மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குப் படகில் கடத்துவதற்காக வாகனங்களில் கொண்டுவரப்பட்டு உயர்தர முந்திரிப் பருப்புகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது, கியூ பிரிவு காவல்துறை மடக்கிப் பிடிக்க முயன்றனர்.

ரஷ்யா - உக்ரைன் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு!

ரஷ்யா - உக்ரைன் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு!

முந்திரிப் பருப்புகள்

அப்போது இருவர் கடலில் குதித்துத் தப்பிய நிலையில், மரைக்காயர்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்து அவரிடமிருந்த பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 20-இற்கும் மேற்பட்ட மூட்டைகளைப் பார்த்தபோது அதில் ரூபாய் 15 இலட்சம் மதிப்பிலான 620 கிலோ எடை கொண்ட உயர்தர முந்திரிப் பருப்புகள் இருந்தது தெரியவந்தது.

இலங்கைக்கு கடத்த முயன்ற உயர்தர முந்திரிப் பருப்பு மூட்டைகள் பறிமுதல்! | High Quality Cashew Nuts Smuggling

இதையடுத்து முந்திரிப் பருப்பு அடங்கிய சாக்கு மூட்டைகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்கள், இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் படகு உள்ளிட்டவற்றை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் கியூ பிரிவு காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், கடலில் குதித்துத் தப்பிய மர்ம நபர்களைக் கியூ பிரிவு காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முழுமையாக டிஜிட்டல் மயமான பிரித்தானிய விசா: வெளியான அறிவிப்பு

முழுமையாக டிஜிட்டல் மயமான பிரித்தானிய விசா: வெளியான அறிவிப்பு

🛑செய்திகள் - Nayan 
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025