அர்ஜுன மற்றும் தம்மிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய அவரது சகோதரர் தம்மிக்க ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக்க ரணதுங்க ஆகியோர், உள்ளூர் டெண்டர்களை தன்னிச்சையான முறையில் கையாண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் விசாரணை
இதன்போது, சந்தை விலையை விட அதிக விலைக்கு ஒப்பந்தங்களை அனுமதித்ததன் மூலம் அரசாங்கத்திற்குச் சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்த சட்டமா அதிபர் திணைக்களம், போதிய சான்றுகளின் அடிப்படையில் இருவருக்கும் எதிராக மேல் நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
எரிபொருள் விநியோகம் மற்றும் கொள்வனவு நடைமுறைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகளின் முடிவில், இந்த பாரிய நிதி மோசடி அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க காவல்துறையினர் மற்றும் உரிய தரப்பினருக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |