கெஹெலியவின் குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

Keheliya Rambukwella Ministry of Health Sri Lanka Law and Order
By Sathangani Nov 17, 2025 08:31 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன், மகள் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று (17) இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கெஹெலிய ரம்புக்வெல்ல, ரமித் ரம்புக்வெல்ல, மகள் அமாலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவர்களது பணிப்பெண் நிபுணி கிரிஷ்ணஜினா ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளுக்கு அமைய இந்த குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

200 ரூபாய்க்கு எதிர்ப்பு வெளியிட்ட நாமலின் மிகப்பெரும் மோசடி! அடுத்தடுத்து வெளிவரும் தரவுகள்

200 ரூபாய்க்கு எதிர்ப்பு வெளியிட்ட நாமலின் மிகப்பெரும் மோசடி! அடுத்தடுத்து வெளிவரும் தரவுகள்

வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு பிரதிவாதியையும் தலா ரூபா 50,000 ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த நீதிபதி, அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்குமாறும் உத்தரவிட்டார்.

கெஹெலியவின் குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் | Chargesheets Filed Against Keheliya S Family

அதனையடுத்து, முன்விசாரணைக்காக அந்த இரண்டு வழக்குகளையும் ஜனவரி மாதம் 12 மற்றும் 14 ஆம் திகதிகளில் அழைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்குக்கும் இதன்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

பிணையில் செல்ல அனுமதி

இதன்போது, அவர்களை ரூபா 50,000 ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், பிரதிவாதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதித்த நீதிபதி, அவர்களது கைரேகைகளைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

கெஹெலியவின் குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் | Chargesheets Filed Against Keheliya S Family

அந்த வழக்கையும் மீண்டும் முன்விசாரணைக்காக ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அழைக்குமாறும் இதன்போது உத்தரவிடப்பட்டது.

சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில் முறைகேடாக சொத்துக்களை ஈட்டியமை தொடர்பிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேங்காய் விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தேங்காய் விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026