அரச பேருந்து ஒன்றின் சாரதி - நடத்துனரால் நடுவீதியில் நின்ற பயணிகள்
அன்மை காலமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் செயற்பாட்டால் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன் தினம் 19 ஞாயிற்றுக்கிழமை இரவு 10ஃ 30 மணியளவில் கொழும்பு புறக்கோட்டை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஆசன முன் பதிவு செய்த பொது மக்களை நடு வீதியில் நிற்க வைத்து சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்று முன் தினம் இரவு மூவர் நீர்கொழும்பு வயிக்கால பகுதியில் இருந்து 36,37,40 போன்ற ஆசனங்களை முன் பதிவு செய்துள்ளனர்.
குறித்த நபர்களுக்கு 11:45 மணியளவில் குறித்த பிரதேசத்திற்கு பேருந்து வருகை தரும் என நடத்துனரால் கூறப்பட்ட நிலையில் அவர்கள் நபர்கள் 11மணியளவில் இருந்து குறிப்பாக 11:30 மணி வரை நடத்துனரிடம் தொலைபேசி அழைப்பு மூலம் தமது வருகைக்கான காத்திருப்பை உறுதி செய்து உள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக 11:45 மணியளவில் குறிப்பிட்ட பிரதேசத்தை கடந்து அதிக வேகத்தில் சென்ற பேருந்தை கவணித்த பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக நடத்துனரின் தொலைபேசிக்கு அழைப்பை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் 30 நிமிடங்கள் வரை எந்த வித பதிலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
அதன் தொடர்ச்சியாக சிறிது நேரத்தின் பின் பாதிக்கப்பட்ட நபர்களிடம் நடத்துனர் தொடர்பு கொண்டு தமது பேருந்தானது குறிப்பிட்ட இடத்தை கடந்து 10KM ற்கு அப்பால் சென்று விட்டது எப்படியாவது தாம் காத்திருக்கிறேம் வருகை தந்து உமது பயணத்தை தொடரும் மாறு கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நடத்துனரிடம் தொலைபேசி அழைப்பு
ஆனால் பேருந்தானது குறிப்பிட்ட இடத்தை கடப்பதற்கு முன் பல முறை நடத்துனரிடம் தொலைபேசி அழைப்பு மூலம் தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின் குறித்த பேருந்தில் வருகை தந்த தமது நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு தமது நிலமை தொடர்பாக கூறிய போது குறித்த நண்பர் முன் பதிவு செய்த ஆசனங்களில் கொழும்பில் இருந்தே பயணிகள் நடத்துனரால் அமர வைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது நடத்துனர் மற்றும் சாரதி என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமது சொந்த தேவைக்காக பணத்தை சேமிக்க முன்னெடுக்கப்பட்ட ஒன்று என பாதிக்கப்பட்ட தரப்புகளால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளதோடு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் இலாப நோக்கோடு தமது பணியை மேற்கொள்ளலாம் சேவை நோக்கோடு செயற்பட வேண்டும் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
