சாவகச்சேரி காவல்துறையினரின் அதிரடி: குவியும் மக்களின் பாராட்டுகள்
அனுமதிப்பத்திரம் இன்றி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் சாவகச்சேரி காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளதுடன், அதன்போது டிப்பரின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றிரவு 12.15 மணியளவில் பளையில் இருந்து அச்சுவேலி நோக்கி மணல் கடத்திச் சென்ற டிப்பரை சாவகச்சேரி காவல்துறை வழிமறித்தவேளை அது நிற்காமல் சென்றுள்ளது.
வழக்கு தாக்கல்
இதன் காரணமாக, காவல்துறையினர் வேகத்தடையை வீதியில் போட்டவேளை டிப்பரின் சக்கரங்கள் காற்றுப் போன நிலையில் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து, சாவகச்சேரி காவல்துறையினர் டிப்பரை காவல்துறையின் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதோடு, இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மக்களின் பாராட்டு
அண்மைக்காலமாக அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தி வரும் டிப்பர்களை மடக்கிப் பிடிப்பதற்கு சாவகச்சேரி காவல்துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமது உயிரையும் துச்சமாக மதித்து, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் சாவகச்சேரி காவல்துறையினரின் இவ்வாறான செயற்பாடுகளை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்