இலங்கையில் மலிவான விலையில் கிடைக்கவுள்ள சீன எரிபொருள்
Fuel Price In Sri Lanka
Kanchana Wijesekera
By Sumithiran
எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலைக்கு சினோபெக் எரிபொருளை விற்பனை செய்யவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று (15) தெரிவித்தார்.
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டெம்பர் மாதம் முதல் செயற்பாடு

“சினோபெக்“ நிறுவனம் செப்டெம்பர் மாதம் முதல் நிறுவனத்தின் வர்த்தக நாமத்தில் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதற்குள் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடனும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி