உக்ரைனுக்கு எதிரான போர் -ரஷ்ய படைகளுடன் இணைந்தது செச்சென் இராணுவம்
russia
army
ukraine
war
Chechen special forces
By Sumithiran
ரஷ்ய படைகளுடன் போரில் ஈடுபட தனது வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக ரஷ்யாவின் ஒரு பகுதியான செச்செனியாவின் தலைவர் கூறியுள்ளார்.
இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், ரம்ஜான் கதீரோஃப், செச்சென் படைகள் இதுவரை உக்ரைனிய இராணுவ வளாகத்தை எந்த உயிரிழப்பும் இன்றி வெற்றிகரமாகக் கைப்பற்றியதாகக் கூறினார்.
தெற்கு ரஷ்ய குடியரசின் தலைவர் ரஷ்ய அதிபரின் முக்கிய கூட்டாளி ஆவார். படையெடுப்பை நியாயப்படுத்தும் அவர், உக்ரைனை தாக்கும் புடினின் முடிவு, ரஷ்யாவின் எதிரிகள் அந்த நாட்டைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் என்றார்.
கதிரோஃபுக்கு விசுவாசமான செச்சென் போராளிகள் ஒரு மோசமான நற்பெயரைக் கொண்டுள்ளார்கள். அதோடு, அவர்மீது மனித உரிமை மீறல் சார்ந்த குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்