செம்மணி விவகாரத்தில் அநுர அரசில் தீர்வுக்கு வாய்ப்பில்லை : சிவிகே உறுதி
செம்மணி மனிதப் புதை குழியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (11.07.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர் “யுத்த காலப்பகுதியில் இராணுவத்தினர் அப்பகுதியில் குடியிருந்ததை யாராலும் மறுதலிக்க முடியாது.
எனவே செம்மணி மனிதப் புதை குழியை ஆய்வு செய்ய சர்வதேச நிபுணர்களை கொண்டு வந்து ஆய்வு செய்ய அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டும்.
அநீதிக்கு உட்பட்டவர்களுக்கும் அவர்களது கும்பங்களுக்கும் நீதி வழங்க வேண்டும் என்றால் அதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும். என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
