செம்மணி மனித புதைகுழி எலும்புக்கூடு பரிசோதனை: நீதிமன்ற தீர்மானம் தொடர்பில் முக்கிய தகவல்
செம்மணியில் கார்பன் பரிசோதனையை முன்னெடுப்பதா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும் என காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜே தற்பரன் இதனை தெரிவித்துள்ளார்.
உடல்கள் எப்போது புதைக்கப்பட்டன என்பதை தீர்மானிப்பதற்கான ஒரு முறையாக கார்பன் பரிசோதனையை பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆதாரங்கள்
இது பயன்படுத்தப்படும் ஒரு முறை குறிப்பாக வேறு பொருட்கள் ஆதாரங்கள் இல்லாதபோது இந்த முறையை பயன்படுத்துவது வழமை என தெரிவித்துள்ள அவர் எனினும் செம்மணி மனித புதைகுழி தொடர்பில்கார்பன் பரிசோதனையை பயன்படுத்த வேண்டுமா என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கையிடம் இதற்கான தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் மாதிரிகளை அமெரிக்கா அல்லது அவுஸ்திரேலியாவிற்கே அனுப்பவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஜூன் இறுதி வாரத்தில் ஆரம்பித்து 15 நாட்கள் இடம்பெற்ற நிலையில இந்த 15 நாட்களில் 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டது.
மனித புதைகுழி
செம்மணி மனித புதைகுழியை அகழும் பணிகளிற்கு தலைமை தாங்கும் பேராசிரியர் ராஜ்சோமதேவ எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் முதல் 15 நாட்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
செம்மணி மனித புதைகுழி குறித்து கரிசனைஎழுப்பியுள்ள இலங்கை தமிழரசுக்கட்சி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சில நடவடிக்கைகளை கோரியுள்ள இலங்கை தமிழரசுக்கட்சி இலங்கையின் தார்மீக மற்றும் சட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கும் உண்மை மற்றும் நீதியை நோக்கிய நம்பமான பாதையை உருவாக்குவதற்கும் இது அவசியம் என தெரிவித்துள்ளது.
இந்த கடிதம் குறித்து பதிலளித்துள்ள காணாமல்போனோர் அலுவலக அதிகாரி தற்பரன் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள விடயங்கள் பயனுள்ளவையாக அர்த்தபூர்வமானவையாக அமையும் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிபுணர்
சுயாதீன மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஈடுபாடு குறித்து கருத்து தெரிவித்த அவர் இதுபோன்ற கூட்டுப் பணிகள் அதிக ஈடுபாட்டிற்கான வளங்களை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எவ்வாறு தலையிட முடியும் என்பதற்கான கூடுதல் சூழமைவை தமிழரசுக்கட்சியின் வேண்டுகோள்கள் நமக்கு வழங்குவதால் நாங்கள் நிச்சயமாக அதில் கவனம் செலுத்துவோம் எனவும் மற்றும் மற்ற தரப்பினரிடமிருந்து தொழில்நுட்ப ஆதரவை நாங்கள் பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போனவர்களின் அலுவலகம் பணியைத் தொடர நாட்டில் அனுபவம் வாய்ந்த நபர்களின் பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கோரப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் காணாமல்போனவர்களின் அலுவலகம் எதிர்கால நடவடிக்கை குறித்து தலைவர் மற்றும் மற்றும் அரசாங்கமே கூட்டாக முடிவு வேண்டும் எனபணிப்பாளர் வலியுருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
