செம்மணி புதைகுழிக்குள் மறைந்த உண்மைகள்: நேரடி சாட்சியத்தின் அதிர்ச்சி தகவல்
செம்மணியில் மனித புதைகுழி என்பது கிரிசாந்தி படுகொலையில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் சோமரத்ன ராசபக்சே வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு என பத்திரிகை ஆசிரியர் சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரேமானந்த் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, முதலாவது செம்மணி மனித புதைகுழி வழக்கில் எலும்புகூடுகளை அகழ்வு மேற்கொள்ளும் போது யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளராக பிரேமானந்த் செயற்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், “தற்போது செம்மணி மனித புதைகுழி அகழ்வுகளை விட மிகவும் சர்வதேச அவதானம் மிக்கதாகவும் பல சர்வதேச ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றவற்றின் பிரசன்னத்துடனே முதலாவது செம்மணி மனித புதைகுழி வழக்கும் அகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டது.
இராணுவச் சிப்பாய் 'சோமரத்ன ராசபக்சே வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் படுகொலை செய்து புதைத்த இரண்டு மனித எலும்கூடுகளை இனம் காட்டினார்.
தொடர்ச்சியாக 14 மனித உடல்கள் எலுப்பு கூடுகளாக அந்த காலத்தில் கண்டு எடுக்கப்பட்டது எனினும், சிப்பாய் கூறியது சுமார் 600 மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்பது.
எனினும், அந்தளவு உடல்கள் கண்டு எடுக்கப்பட்டவில்லை.
இராணுவச் சிப்பாய் சோமரத்ன ராசபக்சே மனநிலை என்பது கிருசாந்தி படுகொலையில் மரண தண்டனை கிடைத்தவுடன், உத்தரவு வழங்கியவர்கள் தப்பிவிட்டார்கள்.
அந்த உத்தரவுகளை செயற்படுத்தியவர்களுக்கு தண்டனையா என்ற கோவத்தில் அவர் வெளிப்படுத்திய விடயமே செம்மணி மனித புதைகுழி தொடர்பான விடயங்கள்.
சிப்பாய் செம்மணி சித்துபாத்தி மயானத்தினை சுற்றியுள்ள பகுதிகளை மனித உடல்கள் இருப்பதாக இனங்காட்டியிருந்தார்.
எனினும் அந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் மனித உடல்கள் கண்டு எடுக்கப்படவில்லை. தற்போது கண்டு எடுக்கப்படும் மனித புதைகுழி என்பது அதனுடன் தொடர்புபடுத்தி பார்க்கவேண்டிய தேவையை கொண்டுள்ளது.
அந்தகாலப்பகுதியில் பலர் காணமால் போனார்கள், அவர்கள் அனைவரினை பற்றி தேடுகின்ற போது ஏதோ ஒரு இராணுவ முகாமுக்கு அருகில் அவர்களை இறுதியாக கண்டதாக சாட்சியங்கள் உண்டு, அதற்கு அப்பால் எந்த தகவல்களும் இல்லை.
அதேவேளை முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினர் மரணமடைந்திருந்தனர் என்பதைம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நேரடி அனுபவங்களை பெற்றவர்களின் சாட்சி பகிர்வுகளாக வருகின்றது இன்றைய களம் நிகழ்ச்சியின் முதலாம் பகுதி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
