20 வருடங்களின் பின் வெளிவரும் உண்மை : செம்மணியில் அலறும் தமிழர் ஆன்மாக்கள்
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னரும், தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ஒரு சத்தமில்லாத இன அழிப்பு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மயான பகுதி என்பது தமிழரின் வாழ்க்கையில் ஆறாத வடுவாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழி விவகாரம் படுகொலை செய்யப்பட்ட கிரிசாந்தியின் வரலாற்றில் இருந்து ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
1996 செப்டம்பர் 7 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் உயர்தர பரீட்சை எழுதி விட்டு சைக்கிளில் வீடு திரும்பும் வழியில் காணாமல் போனார்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கிரிசாந்தி ஐந்து இராணுவத்தினரால் கடத்தப்பட்டதாகவும், ஆறு பேர் அவரை சோதனைச் சாவடியில் வைத்து குழு பாலியல் வல்லுறவு செய்து கொன்றதாகவும் தெரியவந்தது.
இறுதியாக கிரிசாந்தியையும் கொன்று விட்டு நால்வரினதும் உடல்களையும் மூன்று புதைகுழிகளில் புதைத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான முழுமையான விடயங்களை தெரிந்து கொள்ள கீழ் உள்ள காணொளியை காண்க...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this video
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 9 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்