நீதிக்காக தமிழரின் கண்ணீர் முழக்கம்! செம்மணி படுகொலைக்குக்கு எதிராக சீமான் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் நடந்த செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். பன்னாட்டு விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் (Naam Tamilar Katchi) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) தலைமையில் நேற்று (26) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் செம்மணி படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு, மாநில அரசுகள் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
எழுப்பப்பட்ட கோசங்கள்
செம்மணி புதைக்குழிக்கு நீதி வேண்டும், செம்மணி எங்கும் தமிழர் குருதி உள்ளது, சிங்களவர் செய்த அநீதிக்கு நீதி வேண்டும், தோண்ட தோண்ட எலும்பு கூடு பார்க்க பார்க்க நொறுங்குது இதய கூடு, இன்னும் எத்தனை சாட்சி வேண்டும், இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும் ஐநா உரிமை ஆணையமே, நீதி வழங்க மறுக்காதே இனியும் மௌனம் காக்காதே, இந்திய அரசே மத்திய அரசே குரல் கொடு குரல் கொடு பன்னாட்டு விசாரணைக்கு குரல் கொடு, தமிழக அரசே தமிழக அரசே அழுத்தம் கொடு பன்னாட்டு விசாரணைக்கு அழுத்தம் கொடு ” என்று கோசமிட்டனர்.
இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி குறித்து கருத்து வெளியிட்ட கருணாஸ், “எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழதேசத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்மணி மனிதப் புதை குழி படுகொலைக்கு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுகோள் விடுக்கவேண்டும். மேலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்“ என தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
