சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் : சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் (Sabaragamuwa University of Sri Lanka) மாணவர் ஒருவர், அண்மையில் பகிடிவதையின் பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த அறிக்கை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த அறிக்கை அடுத்த வாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் (UGC) சமர்ப்பிக்கப்படும் என சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த (Sunil Shantha) தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
அதன்படி, தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த குறித்த மாணவரின் மரணம் தொடர்பில் விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பாக சுமார் 70 மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக குறித்த விசாரணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
