மீண்டும் ஆரம்பமாகப்போகும் செம்மணி மனித புதை குழி அகழ்வுப்பணி
செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு அமைச்சால் நிதி வழங்கப்பட்டும் தொடர்ச்சியான மழையால் அகழ்வுப் பணிகள் தாமதிக்கப்பட்டுள்ளது.
செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழி வழக்கு இன்று(13) காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் பின்னர் நீதவான் உள்ளிட்ட குழுவினர் செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழி பகுதியைப் பார்வையிட்டனர்.
அதன் போது அந்த இடம் ஒரு களிமண் தரையாகக் காணப்படுகின்றது. தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் இந்த இடத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்வது மிகவும் சிரமமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதைகுழி அகழ்வுக்கு கோரப்பட்ட நிதி , நீதி அமைச்சால் அனுமதி
ஆகவே இந்த வழக்கு மீண்டும் திறந்த நீதிமன்றத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை சட்டவைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா அவர்களால் புதைகுழி அகழ்வுக்கு கோரப்பட்ட நிதி , நீதி அமைச்சால் அனுமதிக்கப்பட்டு அகழ்வுப்பணியைத் தொடர குறித்த தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
