செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் வெடித்த போராட்டம்
Colombo
Jaffna
Sri Lanka
By Raghav
யாழ்ப்பாணம் (Jaffna) - செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டடுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்றைய தினம் (17.07.2025) கொழும்பு தொடருந்து நிலையத்திற்கு முன்பாக நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் 24 நாட்கள் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில், மொத்தமாக 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வு பணிகளை ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








