செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டனர் - சர்வதேசத்தில் அம்பலப்படுத்திய சட்டத்தரணி
அரியாலை சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறோம் என சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் (Germany) அரச ஊடகமான ‘டாய்ச் வெல’வுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம்.
அரசாங்கத்துக்கு புரிதல் இல்லை
ஏற்கனவே இறந்த நிலையில் அவர்கள் புதைக்கப்பட்டிருந்தால் அவர்களின் உடல்கள் வளையாது. சிலரின் கை கால்கள் முறுக்கப்பட்டிருந்தன என சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இப்போதைய அரசாங்கத்தை நம்ப முடியாது என்பதை வரலாறு எங்களுக்கு காட்டுகிறது. அவர்கள் சர்வதேச கண்காணிப்பு எதிர்ப்பார்கள்.
அரசாங்கத்துக்கு இனப்பிரச்னை குறித்த புரிதல் இல்லை - அவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை.
ஊழலை ஒழித்தால் நாடு அமைதியாக இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர். ஆனால் நாடு கடனில் சிக்கியமைக்கு இனப்பிரச்னையும் ஒரு காரணம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என சட்டத்தரணி நிரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா
