செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

Sri Lanka Army Tamils Jaffna chemmani mass graves jaffna
By Sathangani Apr 27, 2026 05:07 AM GMT
Report

புதிய இணைப்பு

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் (27) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், அதற்காக 08 வார கால பகுதி தேவை என சட்ட வைத்திய அதிகாரி மன்றில் விண்ணப்பம் செய்ததற்கு அமைவாக நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம் | Chemmani Massgrave Excavation Work Begins Today

இந்தநிலையில் பருவமழை மற்றும் காலநிலை சீரின்மை காரணமாக மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டதுடன் , புதைகுழிக்குள் மழை வெள்ளமும் நிறைந்து காணப்பட்டது.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 45 நாட்கள் முன்னெடுக்கப்பட்டு, செப்டெம்பர் 06ஆம் திகதியுடன் நிறைவு பெற்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது சுமார் 08 மாத கால பகுதிக்கு பின்னர் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி, நிதியமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செய்திகள் - த.பிரதீபன்


முதலாம் இணைப்பு 

யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதன்படி, இந்த அகழ்வுப் பணிகள் இன்று (27.04.2026) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரி மன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் அகழ்வுப் பணிக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

நாட்டு மக்களுக்கு ரணில் வெளியிட்ட விசேட செய்தி

நாட்டு மக்களுக்கு ரணில் வெளியிட்ட விசேட செய்தி

அகழ்வுப் பணிகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரையில் 240 மனித என்பு கூட்டுத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவற்றுள் 239 மனித என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம் | Chemmani Massgrave Excavation Work Begins Today

முன்னதாக, இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 45 நாட்கள் முன்னெடுக்கப்பட்டு, செப்டெம்பர் 06 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றிருந்தது.

இந்தநிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் சுமார் 08 மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானை இன்று உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானை இன்று உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025