பழைய காயங்களை மீண்டும் திறக்கும் செம்மணி ஆதாரங்கள்! விடுதலைப் புலிகளை கைகாட்டும் சிங்கள இனவாதம்
சிறிலங்கா அரசால் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு முக்கிய மனித உரிமை மீறலான செம்மணி புதைகுழி விவகாரத்தில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நேரடியாக பங்கு இருப்பதாக கூறும் தென்னிலங்கை கடும்போக்காளர்களின் கூற்றுக்களுக்கு தமிழர் தரப்பிலும், சர்வதேச தமிழ் அமைப்புகள் தரப்பிலும் எதிர்புகள் வலுத்துள்ளன.
1998ஆம் ஆண்டு, கிருஷாந்தி குமாரசாமி என்ற தமிழ் மாணவி அத்துமீறலுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்சவின் விசாரணையில் அம்பலமான செம்மணி விவகாரம் இன்று சர்வதேச பரப்பில் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்நிலையில் சிறிலங்கா அரசு மற்றும் சில தரப்பினர், இந்தக் குற்றச்சாட்டுகளை விடுதலைப் புலிகள் மீது திசை திருப்ப தற்போது முயற்சித்து வருகின்றனர்.
ஆனால், இந்தப் புதைகுழிகள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில், அவர்களின் ஆதிக்க காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதே பெரும்பாலான ஆதாரங்கள் கூறுகின்றன.
இவ்வாறு விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்படுவது பெரும்பாலும் அரசியல் உள்நோக்கமே.
இலங்கை உள்நாட்டுப் போரின் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களில், செம்மணி விவகாரம் இலங்கை இராணுவத்தின் பொறுப்பை மிகவும் தெளிவாக காட்டியுள்ளது.
1995இல் "ரிவிரச" என்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது, இராணுவம் தமிழர்களை கைது செய்து, பலரை காணாமல் ஆக்கியது, இது செம்மணி புதைகுழிகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் ஒரு பகுதியாகவே கருதப்படும் செம்மணி விவகாரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணி மற்றும், அதில் உள்ள அரசியல் சூழ்சிகளை விரிவாக கொண்டுவருகிறது இந்த நேர்காணல்...
