யாழ் மாநகரசபையில் வெடித்த குழப்பநிலை: காரணத்தை அம்பலப்படுத்திய முக்கிய புள்ளி
யாழ். மாநகரின் நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ் மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டு பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்தநிலையில், கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது அமர்வின் போது ஏற்ப்பட்ட குழப்ப நிலை காரணமாக 27 ஆம் திகதிக்கு அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
குறித்த அமர்வு முதல்வர் மதிவதனி தலைமையில் இடம்பெற்ற நிலையில், குழுக்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு முடிந்தவுடன் கூட்டத்தை முடித்துக்கொள்வதாக முதல்வர் அறிவித்து சபையிலிருந்து வெளியேறினார்.
இந்தநிலையில், முதல்வரை இடைமறித்த யாழ் மாநகர சபையின் உறுப்பினர் தர்சானந்த், உள்வாங்கப்பட உறுப்பினர்கள் குறித்து இணக்கமின்மை தெரிவித்த நிலையில் மீண்டும் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பிலும், குறித்த நியமனங்களில் ஏன் இணக்கமின்மை என்பது தொடர்பிலும், குழப்பநிலைக்கான காரணம் தொடர்பிலும் யாழ் மாநகர சபையின் உறுப்பினர் தர்சானந்த் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இந்த நேர்காணல்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
