தமிழினத்தை மண்ணுக்குள் கொன்று முடக்கிய இராணுவத்தினர்: அஞ்சி ஒதுங்கும் அநுர
சர்வதேச மட்டத்திலும், இலங்கையில் தென்னிலங்கை மற்றும் மலையக தரப்புக்களிலும் செம்மணி விவகாரம் பாரிய பேசுபொருளாக மாறி இருப்பினும் இலங்கை அரசாங்கம் வாய் திறக்காமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியையும் அரசின் மீதான நம்பகத்தன்மையையும் கேள்வி குறியாக்கியுள்ளது.
நாட்டில் தமிழ் மக்களுக்கு நடந்தவை இனப்படுகொலை இல்லை என காலம் காலமாக இலங்கை அரசு தெரிவித்து வந்த நிலையில், தற்போது எலும்புக்கூடுகள் கொத்து கொத்தாக கண்டுபிடிக்கப்பட்டு நடந்தது இனப்படுகொலைதான் எனவும் அதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயத்தையும் உருவாக்கியுள்ளது.
இருப்பினும், இதற்கு காரணமான சூத்திரதாரிகளை காப்பாற்றுவதில் அன்றைய அரசாங்கம் தொட்டு தற்போதைய அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசாங்கம் வரை மிகவும் கவனமாக உள்ளனர்.
நாட்டில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கும் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கும் நீதி வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்து இருந்த அநுர தற்போது அதற்கு காரணமான இராணுவத்தினரை காப்பாற்ற முற்படுவது என்பது அவர்கள் மீதான பயத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் எனவும் மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
இது தொடர்பிலும், செம்மணி விவகாரத்தில் அநுர அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வு, தமிழ் மக்களின் கோரிக்கை, இவ்வாறு மக்கள் கொல்லப்பட்டமைக்கு காரணமான இராணுவத்தினரின் அடுத்த கட்டம், சர்வதேச நகர்வு மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச சபையின் தவிசாளரும் வடக்கு மனித உரிமைகள் நிலையத்தின் முக்கியஸ்தருமாகிய தியாகராஜா நிரோஸ் தெரிவித்த மேலதிக கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,

செம்மணி எங்கும் உயிருடன் விதைக்கப்பட்ட மக்கள் - சர்வதேச தலையீடு அவசியம்: இயக்குனர் டி.ராஜேந்தர் கோரிக்கை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
