தேசிய பாடசாலையில் சக மாணவனை தாக்கிய மாணவன் : பத்தரமுல்லையில் சம்பவம்

Sri Lanka Police Colombo School Children
By Sathangani Jul 07, 2025 04:33 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

கொழும்பு (Colombo) - பத்தரமுல்லையில் அமைந்துள்ள பிரபலமான தேசிய பாடசாலையின் 11ஆம் தர மாணவன் ஒருவன் அதே பாடசாலையில் உள்ள மற்றொரு மாணவனால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ”கடந்த 3ஆம் திகதி மதியம் 12.05 மணியளவில் மூன்று மாணவர்களுடன் வந்த 11ஆம் தர மாணவன் இந்த தாக்குதலை மேற்கொண்டதோடு, தாக்குதலுக்கு இலக்கான மாணவரின் காது பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள் - பிரித்தானியாவில் வெடித்த போராட்டம்

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள் - பிரித்தானியாவில் வெடித்த போராட்டம்

காவல் நிலையத்தில் முறைப்பாடு

எனினும், இந்த தாக்குதலின் விளைவாக காதில் காயம் ஏற்பட்ட மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க பாடசாலை நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய பாடசாலையில் சக மாணவனை தாக்கிய மாணவன் : பத்தரமுல்லையில் சம்பவம் | National School Grade 11 Student Was Attacked

கொழும்பு தேசிய வைத்தியசாலையை தொடர்புகொண்டு வினவிய போது, குறித்த மாணவன் இன்று (07) செவிப்புலன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் பெற்றோர் இது தொடர்பாக தலங்கம காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

பாடசாலை நேரத்தில் மாணவன் மீது இவ்வளவு கடுமையான தாக்குதல் நடந்துள்ள பின்னணியில், பாடசாலை நிர்வாகம் மாணவனை சிகிச்சைக்கு அனுப்பாமல் கடமை தவறி செயற்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

யாழ். வல்லிபுரம் ஆலயத்திற்கு முன் விபத்து - குடும்பஸ்தர் படுகாயம்: தப்பியோடிய வாகனம்

யாழ். வல்லிபுரம் ஆலயத்திற்கு முன் விபத்து - குடும்பஸ்தர் படுகாயம்: தப்பியோடிய வாகனம்

 சட்டத்தின் மூலம் நீதி கோருதல் 

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் ஒரு திறமையான இசைக்கலைஞர் என்றும், அவரது காதில் ஏற்பட்ட காயம் அவரது எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் கூறிய மாணவனின் தாயார், சட்டத்தின் மூலம் நீதி கோருவதாகவும் கூறினார்.

தேசிய பாடசாலையில் சக மாணவனை தாக்கிய மாணவன் : பத்தரமுல்லையில் சம்பவம் | National School Grade 11 Student Was Attacked

"எங்களுக்கு இழப்பீடு தேவையில்லை. என் மகனுக்கு நடந்தது இன்னொரு பிள்ளைக்கு நடக்கக்கூடாது என்பதற்காக நான் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன். ஏனென்றால், இவ்வாறான சந்தர்ப்பத்தில் என் மகன் மீது கத்தியால் குத்தி இருந்தால் என்ன நடந்திருக்கும்?

அதனால்தான் நான் சட்டத்தின்படி செயல்பட விரும்புகிறேன். எனக்கு பணம் முக்கியமில்லை. நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

"இருப்பினும், இது குறித்து நாங்கள் விசாரித்தபோது, ​​சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், தாக்குதல் குறித்து மறுநாள் காலையில் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், பாடசாலை நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அநுரவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை கொள்ளையடித்த ரில்வின், பிமல் : சம்பிக்க பகிரங்கம்

அநுரவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை கொள்ளையடித்த ரில்வின், பிமல் : சம்பிக்க பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி