ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் மறைமுக சதி! தீவிர விசாரணையில் CID அதிகாரிகள்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள மறைமுக சதித்திட்டங்கள் தொடர்பில் விசேட விசாரணையை குற்றப்புலனாய்வு துறை ஆரம்பித்துள்ளதாக பொதுமக்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர் பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணை முன்னேற்றம்
மேலும் இந்த விசாரணையின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் விசேட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தொடரப்பட்ட வழக்கு, தொடர்ந்து 255 நாட்கள் விசாரிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. அதன் தீர்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னோடியாக இடம்பெற்ற வவுணதீவு காவல்துறை உத்தியோகத்தர்கள் கொலைச் சம்பவத்தின் உண்மைப் பின்னணிகள் கண்டறியப்பட்டு, அது தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தாக்குதலுக்குப் பின்னணியில் ஏதேனும் மறைமுகச் சதித்திட்டங்கள் இருந்தனவா என்பதைக் கண்டறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எவ்வளவு சவால்கள் இருந்தபோதிலும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் இந்த விசாரணைகள் வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்கின்றன. அவற்றை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்படுகிறது.” என ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |