கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் - தப்பியோடிய சந்தேகநபரை தாக்கிய யானை
அநுராதபுரம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று அநுராதபுரம், எப்பாவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹ, லுபள்ளம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கொடூர சம்பவத்தில் மஹ, லுபள்ளம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆயுதத்தால் தாக்கி கொலை
உயிரிழந்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த ஆண் ஒருவர், பணம் தொடர்பான தகராறு காரணமாகக் கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையைச் செய்த பின்னர், சந்தேகநபர் அந்தப் பகுதியிலிருந்து தப்பிச் செல்லும் வழியில் காட்டு யானைத் தாக்குதலுக்குள்ளாகி, காயமடைந்த நிலையில் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் எப்பாவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |