பரகடுவ பகுதியில் வேன் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு!
Sri Lanka Police
Tamils
Sri Lanka Police Investigation
By Shalini Balachandran
எஹெலியகொட, பரகடுவ பகுதியில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர்கள் பயணித்த வேன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினர் குறித்த துப்பாக்கிச் சூடு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
வேனில் பயணித்த ஏனைய சந்தேகநபர்கள் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்தோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி