பரபரப்பில் திருப்பரங்குன்றம்: சர்ச்சையில் TVK: நீதிமன்ற உத்தரவு படி தீபம் ஏற்ற நடவடிக்கை
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரத்தில் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துடன் இன்று தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. தூணில் தீபம் ஏற்றும் நேரம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த இருபதாம் திகதி இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
ஆனால் கார்த்திகை தீப திருநாளான கடந்த 24 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு
உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மதுரை மாவட்ட ஆட்சியர்- இந்து சமய அறநிலைத்துறை ஆணையர்- மதுரை மாநகர காவல் ஆணையர்- ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், காலம் கடந்தாலும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் ராம ரவிக்குமார் - இந்து தர்ம பரிஷத் அமைப்பு ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள் அரவிந்த் குமார்- விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் , திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவிட்டதுடன், அறங்காவலா் குழு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் குழுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தது.
மேலும், திருப்பரங்குன்றம் மலை, தீபத் தூண், தா்கா உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சிஆா்பிஎப் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் உத்தரவிட்டது.
மலர் தூவி மக்கள் வரவேற்பு
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலைமேல் தீபம் ஏற்ற பாதுகாப்பு அளிக்க வந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மேளதாளங்களுடன் மலர் தூவி கிராம பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு தேவையான தற்காலிக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, மலை மீதுள்ள தூணைச் சுற்றிலும் கம்புகள் கட்டப்படுகின்றன.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் வைபவத்தைக் காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் சனிக்கிழமை காலை முதலே திருப்பரங்குன்றத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |