ஊழல் எதிர்ப்பை தவிர அரசிடம் வேறு கொள்கைகள் இல்லை : சந்திரிக்கா கடும் விமர்சனம்

Anura Kumara Dissanayaka Chandrika Kumaratunga NPP Government
By Jaso Nov 28, 2026 10:44 AM GMT
Report

 தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையைப் பாராட்டிய அதேவேளை, இந்த நடவடிக்கையைத் தாண்டி அரசாங்கத்திடம் வேறு கொள்கைகள் ஏதுமில்லை என்றும், இது வர்க்க வெறுப்பைத் தூண்டுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விமர்சித்துள்ளார்.

இலங்கை சட்டக் கல்லூரியின் 'சமத்துவ முன்னெடுப்பு' (Equality Initiative) அமைப்பின் 'வோர்டெக்ஸ்' (VORTEX) ஐந்தாவது தொகுதியை வெளியிடும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை "சிறப்பானது" என்று குறிப்பிட்டாலும், அதைத் தவிர அவர்களிடம் வேறு எந்தக் கொள்கையும் இல்லை என்று கூறினார்.

வேறு கொள்கைகள் இல்லை 

"தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையைத் தவிர அவர்களிடம் வேறு கொள்கைகள் இல்லை என்பதுதான் எனது குறை. அந்த ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை மிகச் சிறப்பானது, ஆனால் அதைத் தாண்டி வேறொன்றும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

ஊழல் எதிர்ப்பை தவிர அரசிடம் வேறு கொள்கைகள் இல்லை : சந்திரிக்கா கடும் விமர்சனம் | Cbk Praises Govts Anti Corruption Drive

மேலும், ஒரு வர்க்கத்திற்கு எதிராக மற்றுமொரு வர்க்கத்தின் மீது வெறுப்பைத் தூண்டுவதைத் தவிர, அரசாங்கத்திடம் வழங்குவதற்கு வேறொன்றும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இளைஞர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்கள் முன்னிலை வகிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த குமாரதுங்க, அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ தலைமைத்துவத்தை வழங்கும் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் அவர்களை வலியுறுத்தினார்.

ஊழல் எதிர்ப்பை தவிர அரசிடம் வேறு கொள்கைகள் இல்லை : சந்திரிக்கா கடும் விமர்சனம் | Cbk Praises Govts Anti Corruption Drive

"நீங்களே தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். நாடாளுமன்றத்தில் உள்ளவர்களோ அல்லது பல்வேறு அரசியல் கட்சிகளில் உள்ளவர்களோ தலைமைத்துவத்தை வழங்குவார்கள் என்று காத்திருக்காதீர்கள்" என்று கூறிய அவர், கொள்கைகள் இல்லாத அரசியல்வாதிகளுக்கு மக்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இலங்கை தனது முழுத் திறனையும் அடையத் தவறியதற்குக் காரணம், நாட்டில் சமத்துவம் இல்லாமையும், ஒரு ஒருங்கிணைந்த தேசத்தை உருவாக்கத் தவறியதுமே என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் மறைமுக சதி! தீவிர விசாரணையில் CID அதிகாரிகள்

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் மறைமுக சதி! தீவிர விசாரணையில் CID அதிகாரிகள்

 ஒருங்கிணைந்த தேசத்தை உருவாக்கத் தவறியதால் ஏற்பட்ட விளைவு

"நமது நாடு இயற்கை வளங்கள் நிறைந்த ஒன்று; அவற்றில் பல இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் போன்ற காரணங்களால், நம்மிடம் மிகச் சிறந்த மனித வளங்கள் உள்ளன. இருப்பினும், தற்போது நாம் உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம். சுருக்கமாகச் சொன்னால், நாம் ஒரு ஒருங்கிணைந்த தேசத்தை உருவாக்கத் தவறியதே இதற்குக் காரணம் என்று நான் கூறுவேன்" என்று அவர் தெரிவித்தார்.

ஊழல் எதிர்ப்பை தவிர அரசிடம் வேறு கொள்கைகள் இல்லை : சந்திரிக்கா கடும் விமர்சனம் | Cbk Praises Govts Anti Corruption Drive

குமாரதுங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதிகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். முன்னைய நாடாளுமன்றம் ஒன்றில், சுமார் 20 உறுப்பினர்கள் மட்டுமே பட்டதாரிகளாக இருந்தனர் என்றும்,ஏனையரவர்களில் பெரும்பாலானோர் உயர்தரப் பரீட்சையைக்கூட நிறைவு செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமத்துவம் என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமன்றி, அனைத்துக் குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சமத்துவம் இல்லாததே இலங்கை உண்மையான மேன்மையை அடைவதைத் தடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். 

கறுப்பு ஜூலை குறித்து ஆராய நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமனம்!

கறுப்பு ஜூலை குறித்து ஆராய நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமனம்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
மரண அறிவித்தல்

அரியாலை, காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம்

26 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

28 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026