கறுப்பு ஜூலை குறித்து ஆராய நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமனம்!
1983 கறுப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட குழு இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தெரிவுக்குழு குறித்து இன்றைய (28) அமர்வின் போது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
நியமிக்கப்பட்ட குழு
இந்தக் குழு கறுப்பு ஜூலை சம்பவத்தின் தாக்கங்கள் தொடர்பில் முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அதன் விளைவுகளை மதிப்பீடு செய்யும் என்று சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பான தமது யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை இந்த தெரிவிக்குழு நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கும் எனவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |