நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல்: விடுக்கப்பட்டுள்ள அம்பர் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் ஏற்படக்கூடும் என அம்பர் (Amber) மட்டத்திலான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28-11-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்
பனிமூட்டமான நிலை
கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக மணிக்கு 60–70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |