செங்கலடி சந்தியில் மின் சமிக்ஞை விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்
வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்குடன் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க செங்கலடி சந்தியானது அகலப்படுத்தப்பட்டு மின் சமிக்ஞை விளக்குகள் பொருத்தும் பணிகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..
இந்த வீதியானது அதிக சன நடமாட்டம் கொண்ட வீதியாகவும், கடந்த காலங்களில் மிக நெருக்கமாகவும் , போக்குவரத்து செய்வதில் சிரமமாகவும், அன்றாடம் பயன்படுத்தும் பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் இடைஞ்சலாகவும் காணப்பட்டது .
பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று துரிதமாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் கீழ் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மின் சமிக்ஞை விளக்குகள் பொருத்தும் பணிகள்

குறித்த இடத்திற்கு கள விஜயம் ஒன்றினை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் நவரத்தினம் திருநாவுக்கரசு செங்கலடி தமிழ் வர்த்தக சங்க தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏறாவூர் பற்று அமைப்பாளருமான சுப்பிரமணியம் ராஜேந்திரன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.