செர்னோபில் அணு உலை மீது ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல்!
செர்னோபில் அணுமின் நிலையத்தில் உள்ள கைவிடப்பட்ட அணு உலையின் மீது ரஷ்யா (Russia) ஆளில்லா விமானம் மூலம் தாக்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதல், ஏற்கெனவே அழிக்கப்பட்ட அணுமின் நிலையத்தில் முன்பு செயலில் இருந்த நான்காவது அணு உலை மீது நேற்றிரவு (13.02.2025) நடத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டது, அது அணைக்கப்பட்டு விட்டதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அணு சக்தி நிறுவனம்
நேற்றிரவு வெடிப்பு சம்பவம் நடந்த சில நிமிடங்களில் தீயணைப்பு வீரர்களும், வாகனங்களும் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியி்ல ஈடுபட்டனர்.
இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று சர்வதேச அணு சக்தி நிறுவனம் (IAEA) தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்றிரவு (13) அதிக வெடிக்கும் திறன்கொண்ட போரில் பயன்படுத்தப்படும் மூலம் ரஷ்யா செர்னோபில்லில் உள்ள அழிக்கப்பட்ட நான்காவது அலகு அணு உலையில் இருக்கும் கதிர் வீச்சுகளில் இருந்து உலகை பாதுகாக்க அமைக்கப்பட்ட தடுப்பு அமைப்பு (shelter) மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி
இந்தத் தாக்குதலால் செர்னோபில் அணு உலை கதிர்வீச்சு தடுப்பு அமைப்பு சேதமடைந்துள்ளது. தீ அணைக்கப்பட்டுவிட்டது. தற்போதைய சூழலலில் கதிர் வீச்சு அளவு அதிகரிக்கவில்லை, நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Last night, a Russian attack drone with a high-explosive warhead struck the shelter protecting the world from radiation at the destroyed 4th power unit of the Chornobyl Nuclear Power Plant.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) February 14, 2025
This shelter was built by Ukraine together with other countries of Europe and the world,… pic.twitter.com/mLTGeDYgPT
முதல்கட்ட மதிப்பீட்டின் படி தடுப்புஅமைப்பு குறிப்பிடத் தகுந்த அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த நூற்றாண்டிலும் அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியே கசிந்து விடாத வகையில் அந்த தடுப்பு அமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)