மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற அனர்த்தம் -பெருமளவு உயிரினங்கள் பரிதாப மரணம்
accident
batticaloa
police
chickens-killed
By Sumithiran
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் பெருளவு கோழிகள் உயிரிழந்துள்ளன.
மட்டக்களப்பு காவல்துறை தலைமையகத்துக்குட்பட்ட ஊறணிப் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் பலத்த காயமடைந்துள்ளதாகவும்
ஏராளமான கோழிகள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
