ஸ்டாலினை அடுத்து வைகோவை சந்தித்தார் விஜய்
தமிழக சட்டசபை கூட்டம் இன்று நிறைவடைந்த உடன் முதலமைச்சர் விஜய் ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற விஜய்யை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.
விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த பரிசு
வீட்டிற்குள் சென்ற விஜய்யை கையை பிடித்து அழைத்து சென்ற மு.க.ஸ்டாலின், பிறகு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர். இரு தலைவர்களும் சுமார் 10 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.

இதையடுத்து, முதல் அமைச்சர் விஜய்க்கு ' காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' என்ற புத்தகத்தை உதயநிதி ஸ்டாலின் பரிசாக அளித்தார்.
வைகோவிடம் வாழ்த்து பெற்ற விஜய்
இதனையடுத்து முதல்-அமைச்சர் விஜய் அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டிற்கு நேரில் சென்றார். வைகோவை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய் அவரிடம் வாழ்த்து பெற்றார்.

முன்பாக, முதல்-அமைச்சர் விஜய்யை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வீட்டின் வாசலுக்கே வந்து ஆரத்தழுவி வரவேற்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |