சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் பெருந்தொகை அபராதம்! திருத்தப்பட்டது சட்டம்
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு (திருத்த) சட்டமூலத்திற்கு சான்றளித்துள்ளார்.
இதன்மூலம், இத்திருத்தச் சட்டம் "2026-ஆம் ஆண்டின் பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு (திருத்த) சட்டம் எண் 21" என அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்தவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலம், ஓகஸ்ட் 20 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) சபாநாயகரின் சான்றளிப்பைப் பெற்றது.
அபராதத் தொகை
இந்த புதிய திருத்தத்தின் மூலம், 1956-ஆம் ஆண்டின் 47-ஆம் எண் பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் குற்றங்களுக்கான அபராதத் தொகை ரூ. 10,000-இலிருந்து ரூ. 100,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இச்சட்டம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைக் கடுமையாகத் தடை செய்கிறது.
தற்போதைய சமூக மற்றும் பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப குற்றங்களுக்கான தண்டனைகளை மாற்றியமைக்கவும், சிறுவர் தொழிலாளர் முறையைத் தடுத்து, தொழில்துறையில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளைப் பலப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |