பச்சிளம் குழந்தை 10 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை - மொனராகலையில் துயரம்
Sri Lanka Police
Sri Lanka
Child Abuse
Crime
By pavan
குழந்தையை விற்ற நபர்
தனது மனைவியின் தங்கைக்கு தன் மூலம் பிறந்த 12 நாள் குழந்தையை விற்ற நபரை விளக்கமறியலில் வைக்குமாறு மொனறாகலை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 நாள் குழந்தையை 10,000 ரூபாவுக்கு விற்பனை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இம்மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொனறாகலை மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் சஜினி அமரவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை

மொனராகலை மாவட்டத்தின், மொனறகெலே தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நபர் தனது மனைவியின் சகோதரியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர் எனவும் காவல்துறையினர் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இது போன்ற விரிவான மற்றும் பல செய்திகளை காண்பதற்கு முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி