வெளிநாட்டில் இருந்து வருகை தரும் சிறுவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு PCR பரிசோதனை அறிக்கை அவசியமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெறப்பட்ட கொவிட் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் PCR அறிக்கையை விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்த ஒருவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்குள் கொவிட் தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த 48 மணித்தியாலங்களுக்குள் பெறப்பட்ட விரைவான அன்டிஜன் அறிக்கை போதுமானது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
மேலும், அவர்கள் தேவையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.