மட்டக்களப்பில் சிறுவன் மாயம் -பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை
மட்டக்களப்பு சந்திவெளியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் காணாமற்போயுள்ளதாக காவல் நிலையத்தில் பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்திவெளி பத்தினி அம்மன் கோவில் வீதி ஜீவபுரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய அன்ரனி ஆனுராஸ் என்ற சிறுவனே கடந்த 28ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
கையடக்க தொலேபேசி கவரினுள் வைத்திருந்த இரண்டாயிரம் ரூபா பணத்தை காணவில்லை எனவும் அத்துடன் சிறுவனையும் எங்கு தேடியும் காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்துதருமாறு இன்று புதன்கிழமை (02) பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சிறுவன் பற்றிய தகவல்கள்; தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு பொதுமக்களை காவல்துறையினர் கோரியுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
